T
Jump to navigation
Jump to search
|
T (தீ அல்லது டி அல்லது ரீ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் 20ஆவது எழுத்து ஆகும்.[1] ஆங்கில உரைப் பகுதிகளில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் இரண்டாவது எழுத்து t ஆகும்; கூடுதலாகப் பயன்படுத்தப்படும் மெய்யொலியும் t ஆகும்.[2]
கணிதத்திலும் ஏரணத்திலும் அறிவியியலிலும்[தொகு]
கணிதத்தில், தொடர் ஒன்றின் nஆவது உறுப்பு Tnஆல் குறிக்கப்படும்.
ஏரணத்தில், உண்மைக்கான குறியீடாக T பயன்படுத்தப்படுவதுண்டு.
இயற்பியலில், வெப்பவியக்கவியல் வெப்பநிலையைக் குறிக்க T பயன்படுத்தப்படும். காந்தப்பாய அடர்த்தியின் அனைத்துலக முறை அலகான தெசுலாவின் குறியீடும் T ஆகும். திணிவின் அலகான தொன்னைக் குறிக்க t பயன்படுத்தப்படும். நேரத்தைக் குறிக்கவும் t பயன்படுத்தப்படும்.
வேதியியலில், நீரியத்தின் ஓரிடத்தானாகிய திரித்தியத்தின் குறியீடு T ஆகும்.
தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்[தொகு]
- Τ τ : கிரேக்க எழுத்து தோ
- Т т : சிரில்லிய எழுத்து தே
- ת : எபிரேய எழுத்து தாவு
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "English Alphabet". EnglishClub. 2015 ஆகத்து 31 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=
(உதவி) - ↑ Lewand, Robert. "Relative Frequencies of Letters in General English Plain text". Central College. 2008-07-08 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008 சூன் 25 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி); Check date values in:|accessdate=
(உதவி)