மௌரியப் பேரரசு (கிமு 322 – கிமு 185), இந்தியாவில் மௌரிய அரச வம்சத்தினர் ஆண்ட பேரரசு ஆகும். பழங்கால இந்தியாவில் பரப்பளவில் விரிவானதும், அரசியல், படைத்துறை தொடர்பில் மிகவும் வலுவானதுமாக இப்பேரரசு விளங்கியது. இந்தியத் துணைக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில், கங்கைச் சமவெளியில், இன்றைய பீகார், வங்காளம் ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த மகத நாட்டை அடிப்படையாகக் கொண்டே இப் பேரரசு உருவானது. மேலும்...
பண்டைய எகிப்து இராச்சியத்தின் வரலாறு, கிமு 2686 இல் துவங்கி, கிமு 2181 முடிய விளங்கியது. இந்த இராச்சியத்தின் ஆட்சியாளர்களான பார்வோன்கள் இறந்ததற்கு பின்னர் உடல்களை அடக்கம் செய்வதற்கு பிரமிடுகளை கட்டியதால், பழைய எகிப்திய இராச்சியத்தை பிரமிடுகளின் காலம் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவர். இந்த இராச்சியத்தை மூன்றாம் வம்சத்தவர் முதல் ஆறாம் வம்சத்தினர் வரை கிமு 2681 முதல் கிமு 2181 முடிய 500 ஆண்டுகள் ஆண்டனர். மேலும்...
செரெங்கெட்டி இடப்பெயர்வு (படம்) ஒவ்வோராண்டும் ஒரே நேரத்தில், ஆப்பிரிக்காவின் செரங்கட்டி சரணாலயத்திலிருந்து மசாய் மாரா என்ற இடத்துக்கு லட்சக்கணக்கான விலங்குகள் இடம் பெயரும் ஒரு நிகழ்வு.
புழுப்பாம்புகள் அனைத்தும் பெண் பாம்புகளாக இருப்பதால், ஆண் துணையின்றி இனப்பெருக்கம் செய்பவையாக உள்ளன.
188 மீட்டர் உயரம் உடைய தக்கீசு அணை ஆப்பிரிக்காவிலேயேஉயரமான அணையாகும்.
என்ஹெடுவானா என்பவர் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் கிடைக்கப்பெறும் முதல் எழுத்தாளராகவும், முதல் பெண் கவிஞராகவும் உலக வரலாற்றில் இடம்பெற்றவர் ஆவார்.
உருசிய-உக்ரைனிய நெருக்கடியின் விரிவாக்கமாக, கிழக்கு உக்ரைனின் தனியெத்சுக், இலுகான்சுக் குடியரசுகளை உருசியா அதிகாரபூர்வமாக அங்கீகரித்து, அப்பகுதிக்குத் தனது படைகளை அனுப்பியது.
ஆப்பிரிக்க கழுகு ஒரு ஆகாயத்தோட்டியாகச் செயல்படுகிறது. இதன் கழுத்து தலை ஆகியன முடியின்றி சுருக்கம் விழுந்து காணப்படும். இப்பறவை 4.2 இல் இருந்து 7.2 கிலோ கிராம் எடை இருக்கும்.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,44,835 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.