தி கார்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
The Guardian 2018.svg

தி கார்டியன் (The Guardian) என்பது இங்கிலாந்தில் வெளியாகும் நாளேடு. 1821ல் தி மான்செஸ்டர் கார்டியன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு 1959 வரை அப்பெயரிலேயே விளங்கியது. இதன் முதல் இதழ் 5 மே 1821இல் வெளியானது. [1]

ஆசிரியர்[மூலத்தைத் தொகு]

இதன் தற்போதைய ஆசிரியர் காத்தரின் வைனர் ஆவார். [2] இதற்கு முன்பு இப்பொறுப்பினை ஆலன் ரஸ்பிரிட்சர் வகித்தார்.

சகோதர இதழ்கள்[மூலத்தைத் தொகு]

சகோதர இதழ்களான தி அப்சர்வர் மற்றும் தி கார்டியன் வீக்லீ ஆகியவற்றுடன் கார்டியன் ஊடகப் பிரிவின் ஓர் அங்கமாக இவ்விதழ் உள்ளது. [3] இங்கிலாந்தில் மட்டுமின்றி, உலகளவில் முன்னணி நாளேடுகளில் ஒன்றாக, அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

தி கார்டியன் ஒரு இடதுசாரி தினசரி. ஆரம்பத்தில் உள்ளுரில் மட்டும் இருந்தது. பின்னாளில் ஒரு தேசிய செய்தித்தாளாக மாறி இன்று உலகளாவிய ஊடகமாக இணையத்திலும் தொடர்புடையதாக மிகச் சிறப்பாக வளர்ந்துள்ளது. அதற்கு இரண்டு கணினி சார்ந்த கிளைகள் கார்டியன் ஆஸ்திரேலியா மற்றும் கார்டியன் US என்ற பெயரில்  ஐக்கிய இராச்சியத்திற்கு  வெளியே செயல்படுகின்றன.

2018இல் டேப்ளாய்ட் வடிவம்[மூலத்தைத் தொகு]

சூன் 2017இல் கார்டியன் ஊடகப் பிரிவு இவ்விதழும் அப்சர்வர் இதழும் சனவரி 2018இல் மறுபடியும் டேப்ளாய்ட் வடிவிற்கு மாறவுள்ளதாகத் தெரிவித்தது. [4] 15 சனவரி 2018இல் டேப்ளாய்ட் வடிவிற்கு மாறியது. [5] இவ்விதழின் வடிவு மாற்றத்திற்கு வாசகர்களும், சக இதழ்களும் கருத்துகளைத் தெரிவித்திருந்தன. [6]

சான்றுகள்[மூலத்தைத் தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_கார்டியன்&oldid=2474797" இருந்து மீள்விக்கப்பட்டது