இருப்பிடம்

உங்கள் IP முகவரி அல்லது வைஃபை இணைப்பு போன்ற இணைப்புத் தகவல்கள் மற்றும் உங்கள் சாதனத்தின் GPS சிக்னல் போன்ற குறிப்பிட்ட இருப்பிடத் தகவல்களானது, நீங்கள் எங்கே உள்ளீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள எங்களுக்கு உதவும்.
உங்களுக்கு அருகில் நடைபெறும் நிகழ்வுகளைக் கண்டறியவும்
நிகழ்வுகள்
அருகில் நடைபெறும் நிகழ்வுகளை நீங்கள் கண்டறியவும் மற்றும் உள்ளூர் விளம்பரங்களையும் செய்திகளையும் உங்களுக்குக் காட்டவும் இந்தத் தகவல்கள் பயன்படுத்தப்படலாம்.
8 பேர் பாதுகாப்பாக இருப்பதாகக் குறித்துள்ளனர்
அல்லது Facebook இன் பாதுகாப்பு அறிவிப்பு அம்சத்தைப் பயன்படுத்தி, உலகின் எந்த இடத்தில் பேரிடர் ஏற்பட்டாலும், நண்பர்கள் 'பாதுகாப்பாக' இருப்பதாகத் தெரிவிக்கலாம்.
உங்கள் கணக்கைப் பாதுகாக்க வைத்திருப்பதற்கும் இருப்பிடம் உதவும். சந்தேகத்திற்குரிய செயல்பாட்டைக் கண்டறிய, வழக்கமாக நீங்கள் உள்நுழையும் இடத்தையும் பிற தகவலையும் சேர்த்துப் பயன்படுத்துவோம்.
இருப்பிடம்
அமைப்புகள்
எங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தால், Facebook தயாரிப்புகளைப் பயன்படுத்தாமல் இருக்கும் போது, உங்கள் மொபைல் சாதனத்தில் உள்ள இருப்பிடச் சேவைகள் என்ற அமைப்பு மூலம், உங்கள் சாதனம் துல்லியமான இருப்பிடத் தகவல்களை Facebook தயாரிப்புகளுடன் பகிரலாமா வேண்டாமா என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
இருப்பிடம்
அமைப்புகள்
இருப்பினும் செக்-இன்கள், நிகழ்வுகள், உங்கள் இணைய இணைப்புப் பற்றிய தகவல்கள் போன்ற விஷயங்களைப் பயன்படுத்தி உங்கள் இருப்பிடத்தை நாங்கள் தெரிந்துகொள்ளலாம்.
பின்னணியில் இயங்கும் இருப்பிடத் தரவு
இருப்பிட அணுகல்
Android இல், Facebook பயன்பாட்டில் உள்ள பின்னணியில் இயங்கும் இருப்பிடத் தரவு அமைப்பானது, நீங்கள் பயன்பாட்டைப் பயன்படுத்தாத போது, இருப்பிடச் சேவைகள் மூலம் உங்கள் துல்லியமான இருப்பிடத்தை Facebook அணுகலாமா என்பதைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.
எப்போதும்
இருப்பிட அமைப்புகள்
iOS இல், உங்கள் சாதனத்தில் இருப்பிடச் சேவைகளை "எப்போதும்" என அமைத்தால் மட்டுமே, நீங்கள் பயன்பாட்டைப் பயன்படுத்தாத போது உங்கள் துல்லியமான இருப்பிடத்தை Facebook சேகரிக்கும்.
ஆன்டன் ரைட்
ரெனடா நிடோ
ரெனடா நிடோ
இருப்பிட வரலாறு என்பது நீங்கள் சென்ற இடங்களை நாட்களின் வாரியாகக் காட்டும் காலக்கோடாகும். இதை இருப்பிட அமைப்புகளில் இயக்கலாம் அல்லது முடக்கலாம் அல்லது இதை எப்போது வேண்டுமானாலும் Facebook பயன்பாட்டில் நீக்கலாம்.
Facebook தயாரிப்புகளில் உங்கள் இருப்பிடத்தை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். இருப்பிடம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது மற்றும் அதை நீங்கள் எவ்வாறு நிர்வகிக்கலாம் என்பதை விளக்கும் சில எடுத்துக்காட்டுகள் இவையாகும். இருப்பிடத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றி மேலும் அறிக.
தனியுரிமைச் சரிப்பார்ப்பை மேற்கொள்ளவும்
இது உதவிகரமாக இருந்ததா?
நீங்கள் அறிந்தவற்றைப் பகிரவும்
1 / 11