Facebook இல் உள்ள பொதுத் தகவல்கள் என்றால் என்ன?

பொதுவில் இருக்கும் ஒன்றை எவரும் பார்க்கலாம். அதில் உங்கள் நண்பர்கள் அல்லாதவர்கள், Facebookக்கு வெளியே உள்ளவர்கள் மற்றும் அச்சு, ஒளிபரப்பு (எடுத்துக்காட்டு: தொலைக்காட்சி) மற்றும் இணையதளத்தில் பிற தளங்களை பயன்படுத்துவோர் உட்பட வெவ்வேறு மீடியாவைப் பயன்படுத்துவோர் இதில் அடங்குவர். எடுத்துக்காட்டாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நிகழ்நேர பொது கருத்தைத் தெரிவிக்க எங்கள் சேவைகளைப் பயன்படுத்தினால், அது அந்த நிகழ்ச்சியில் அல்லது Facebook இல் எங்காவது தோன்றலாம்.
எந்தத் தகவல்கள் பொதுவில் இருக்கும்?
உங்களால் பகிரப்படும் எப்போதும் பொதுவில் இருக்கும் தகவல்கள்: சுயவிவரத்தை நிரப்பும்போது உங்களால் வழங்கப்படும் வயது வரம்பு, மொழி மற்றும் நாடு போன்ற சில தகவல்கள் பொதுவில் இருக்கும். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் தொடர்புகொள்ள உதவுவதற்காக, பொது சுயவிவரம் என்று அழைக்கப்படும் உங்கள் சுயவிவரத்தின் ஒரு பகுதியையும் பயன்படுத்தப்படும். உங்கள் பெயர், பாலினம், பயனர்பெயர் மற்றும் பயனர் ஐடி (கணக்கு எண்), சுயவிவரப் படம், மற்றும் அட்டைப் படம் போன்றவற்றை பொது சுயவிவரம் உள்ளடக்கும். இந்தத் தகவலும் பொதுவில் உள்ளது. உங்களை இணைக்க உதவும் சில வழிகள்:
  • உங்கள் பெயர், சுயவிவரப் படம் மற்றும் அட்டைப் படம் ஆகியவை பயனர்களுக்கு உங்களை அடையாளங்கான உதவுகின்றன.
  • பாலினம் உங்களை பற்றி விவரிக்க உதவும் (எடுத்துக்காட்டு: "அவரை நண்பராகச் சேர்").
  • உங்கள் நெட்வொர்க்குகளை பட்டியலிடுவது (எடுத்துக்காட்டு: பள்ளி, பணியிடம்) மற்றவர்கள் உங்களை எளிதாக கண்டறிவதை அனுமதிக்கும்.
  • பயனர்பெயர் மற்றும் பயனர் ஐடி (எடுத்துக்காட்டு: உங்கள் கணக்கு எண்) உங்கள் சுயவிவரத்தின் URL இல் உள்ளன.
  • உங்கள் வயதுக்குப் பொருத்தமான உள்ளடக்கத்தை வழங்க வயது வரம்பு உதவுகிறது.
  • பொருத்தமான உள்ளடக்கம் மற்றும் அனுபவங்களை வழங்க மொழி மற்றும் நாடு உதவுகிறது.
நீங்கள் பொதுவில் பகிரும் தகவல்கள்: எதையேனும் பொதுவில் பகிர தேர்ந்தெடுக்கும்போது (எடுத்துக்காட்டு: பார்வையாளர் தேர்வியில் இருந்து பொது என்பதைத் தேர்ந்தெடுக்கும்போது), அது பொதுவான தகவல்கள் என்று கருதப்படும். நீங்கள் எதையேனும் பகிர்ந்து பார்வையாளர் தேர்வி அல்லது வேறு தனியுரிமை அமைப்புகளைப் பார்க்கவில்லை எனில், அந்தத் தகவல்களும் பொதுவானதாகும். உங்கள் Facebook சுயவிவரத்தில் உங்களின் அடிப்படைத் தகவலை யார் பார்க்கலாம் என்பதை திருத்துதல் என்பதைப் பற்றியும் மற்றும் நீங்கள் Facebook இல் இடுகையிடும்போது யாருடன் பகிர்கிறீர்கள் என்பதை பார்வையாளர் தேர்வியைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்துவதைப் பற்றியும் மேலும் அறிக.
மற்றவர் பகிரும் விஷயம்: மற்றவர்கள் உங்களைப் பற்றிய தகவலைப் பகிர்ந்தால், அது நீங்கள் அவர்களுடன் பகிர்ந்து பொதுவில் வைக்காமல் இருந்தாலும், அவர்கள் அதைப் பொதுவில் வைக்க தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் மற்றவரின் பொது இடுகைகள் மீது கருத்துத்தெரிவிக்கும் போது, உங்கள் கருத்தும் பொதுவானதாகும்.
Facebook பக்கங்கள் அல்லது பொது குழுக்களில் உள்ள இடுகைகள்: Facebook பக்கங்களும் பொது குழுக்களும் பொதுவானவையாகும். பக்கம் அல்லது குழுவைப் பார்க்கக்கூடும் எவரும் உங்கள் இடுகை அல்லது கருத்தைப் பார்க்கலாம். பொதுவாக, பக்கம் அல்லது பொது குழுவில் இடுகையிட்டாலோ அல்லது கருத்து தெரிவித்தாலோ, செய்தி ஃபீடிலும் Facebook இல் அல்லது அதற்கு வெளியில் உள்ள மற்ற இடங்களிலும் ஒரு கதையானது வெளியிடப்படலாம்.
பொதுத் தகவல்களைப் பற்றி நினைவில் கொள்ளவேண்டியவை:
  • Facebookக்கு வெளியிலும் உங்களுடன் தொடர்பு கொண்டிருக்கவும்
  • Facebook அல்லது மற்றொரு தேடல் இன்ஜினில் எவரேனும் தேடும்போது காண்பிக்கப்படும்
  • நீங்களும் உங்கள் நண்பர்களும் பயன்படுத்தும் Facebook உடன் ஒருங்கிணைக்கப்பட்ட கேம்கள், செயலிகள் மற்றும் இணையத்தளம் ஆகியவற்றை அணுகலாம்
  • எங்களது கிராஃப் API போன்ற, எங்கள் APIகளைப் பயன்படுத்தும் எவரும் அணுகலாம்
இது உதவிகரமாக இருந்ததா?
ஆம்
இல்லை