Twitter -இல் நேரலை வீடியோக்களை எவ்வாறு உருவாக்குவது

Twitter என்பது முக்கியச் செய்திகள் முதல் முக்கிய நேரலை நிகழ்வுகள் வரை உலகில் நடக்கும் விஷயங்களைப் பார்ப்பதற்கான இடம். நடப்பவற்றை நேரலையில் பகிர்வதற்கு, Periscope வழங்கும் நேரலை வீடியோக்களை எளிதாக உருவாக்க முடியும்.

View instructions for:

ஒரு நேரலை வீடியோவை உருவாக்குதல்

நேரலை வீடியோவைத் தொடங்குவது எவ்வாறு:

  1. முகப்புக் காலவரிசையிலிருந்து இடதுபுறம் ஸ்வைப் செய்யவும் அல்லது தொகுப்பானிலிருந்து -ஐத் தொடவும்.
  2. கீழ் தேர்ந்தெடுப்பியில் நேரலைப் பயன்முறையைத் தொடவும்.
  3. வீடியோ இல்லாமல் ஆடியோவுடன் நேரலைக்குச் செல்ல, மேல் வலதுபுறத்தில் உள்ள மைக்ரோஃபோனைத் தொடவும். இது கேமராவை முடக்கும், நீங்கள் கூறுவதைப் பார்வையாளர்கள் கேட்பார்கள், ஆனால் உங்களைப் பார்க்க மாட்டார்கள்.
  4. விரும்பினால் கீச்சாகத் தோன்றும் விருப்பத்திற்குரிய விளக்கத்தையும், இருப்பிடத்தையும் நிரப்பவும். பிறகு, நேரலைக்குச் செல் என்பதை அழுத்தவும்.
  5. விளக்கம் மற்றும் இருப்பிடத்துடன் (சேர்த்திருந்தால்) உங்கள் நேரலை அலைபரப்பு உங்களைப் பின்தொடர்பவரின் காலவரிசையிலுள்ள கீச்சிலும் உங்கள் சுயவிவரத்திலும் தோன்றும்.

நேரலை வீடியோவை நிறுத்துவது எவ்வாறு:

மேல் இடதுபுறத்திலுள்ள நிறுத்து என்ற பொத்தானை அழுத்தி, தோன்றுகின்ற மெனுவில் உங்கள் செயலை உறுதிப்படுத்தி எந்த நேரத்திலும் நீங்கள் நேரலை வீடியோவை நிறுத்தலாம்.

ஒரு நேரலை வீடியோவை உருவாக்குதல்

நேரலை வீடியோவைத் தொடங்குவது எவ்வாறு:

  1. முகப்புக் காலவரிசையிலிருந்து இடதுபுறம் ஸ்வைப் செய்யவும் அல்லது தொகுப்பானிலிருந்து -ஐத் தொடவும்.
  2. கீழ் தேர்ந்தெடுப்பியில் நேரலைப் பயன்முறையைத் தொடவும்.
  3. ஆடியோவுடன் ஆனால் வீடியோ இல்லாமல் நேரலைக்குச் செல்ல, மேல் வலதுபுறத்தில் உள்ள மைக்ரோஃபோனைத் தொடவும். இது கேமராவை முடக்கும், நீங்கள் கூறுவதைப் பார்வையாளர்கள் கேட்பார்கள், ஆனால் உங்களைப் பார்க்க மாட்டார்கள்.
  4. விரும்பினால் கீச்சாகத் தோன்றும் விருப்பத்திற்குரிய விளக்கத்தையும், இருப்பிடத்தையும் நிரப்பவும். பிறகு, நேரலைக்குச் செல் என்பதை அழுத்தவும்.
  5. விளக்கம் மற்றும் இருப்பிடத்துடன் (சேர்த்திருந்தால்) உங்கள் நேரலை அலைபரப்பு உங்களைப் பின்தொடர்பவரின் காலவரிசையிலுள்ள கீச்சிலும் உங்கள் சுயவிவரத்திலும் தோன்றும்.

நேரலை வீடியோவை நிறுத்துவது எவ்வாறு:

மேல் இடதுபுறத்திலுள்ள நிறுத்து என்ற பொத்தானை அழுத்தி, தோன்றுகின்ற மெனுவில் உங்கள் செயலை உறுதிப்படுத்தி எந்த நேரத்திலும் நீங்கள் நேரலை வீடியோவை நிறுத்தலாம்.

Twitter-இல் நேரலை வீடியோக்களை எவ்வாறு கண்டுபிடிக்கலாம்?

உங்கள் முகப்புக் காலவரிசை, அறிவிப்புகள், தேடல் மற்றும் நடப்புகளிலிருந்து நேரலை வீடியோக்களைக் கண்டறியலாம் மற்றும் பார்க்கலாம். கணக்கு பாதுகாக்கப்படாத Twitter மற்றும் Periscope-இல் எவரிடமிருந்தும் நேரலை வீடியோக்களையும் ரீப்ளேகளையும் பார்க்கலாம்.

 

விருந்தினர்களுடன் நேரலைக்குச் செல்க

இயக்கப்படும்போது, ஒரு வலைபரப்பாளர் தங்கள் பார்வையாளர்களை விருந்தினர்களாகச் சேர அழைக்க முடியும் மற்றும் நேரலை அலைபரப்பின் பார்வையாளர்கள் ஒரு விருந்தினராகச் சேர கோரிக்கை விடுக்க முடியும். ஒரே நேரத்தில் ஒரு நேரலை அலைபரப்பில் 3 விருந்தினர்கள் வரை பங்கேற்க முடியும். வலைபரப்பிகள், கேமராவை முடக்கி, ஆடியோவாக மட்டும் பங்கேற்பதற்குத் தேர்வு செய்ய முடியும். விருந்தினர்கள், ஆடியோவுடன் பங்கேற்பார்கள், மேலும் அவர்கள் கூறுவதை அனைத்துப் பார்வையாளர்களும் கேட்க முடியும்.

விருந்தினர்களுடன் நேரலை அலைபரப்பைத் தொடங்குவதற்கு:

  1. உங்கள் காலவரிசையிலிருந்து இடதுபுறம் ஸ்வைப் செய்து அல்லது கீச்சு தொகுப்பானிலிருந்து  -ஐத் தொட்டு, கேமராவைத் திறக்கவும்.

  2. அடிப்புறத்தில் நேரலைப் பயன்முறையைத் தொடவும்.

  3. நேரலைப் பார்வையாளர்கள் உங்கள் அலைபரப்பில் இணைவதற்குக் கோர அனுமதிக்க, மேல் வலதுபுறத்திலுள்ள  Faces button Created with Sketch.  ஐகானைத் தொடவும்.

  4. உங்கள் அலைபரப்பைத் தொடங்க, நேரலைக்குச் செல்க என்பதைத் தொடவும்.

  5. பார்வையாளர் ஒருவர் உங்கள் அலைபரப்பில் இணைவதற்கு கேட்டுள்ள போது, அரட்டையில் ஓர் அறிவிப்பு தோன்றும். அடிப்புறத்திலுள்ள  Faces button Created with Sketch.  ஐகானைத் தொடுவதன் மூலம், அலைபரப்பின்போது அழைத்தவர்களின் பட்டியலையும் நீங்கள் காணலாம், மேலும் அலைபரப்பில் இணைவதற்குக் கோரிக்கை விடுத்துள்ள அனைத்துப் பார்வையாளர்களையும் பார்க்கலாம்.

  6. அவர்களை அலைபரப்பில் சேர்க்க,  -ஐத் தொடவும். அவர்கள் இணையும் முன், 5 வினாடி கவுண்டவுன் இருக்கும்.

  7. அலைபரப்பிலிருந்து விருந்தினரை அகற்ற, அவரது அவதாரின் மேல் வலதுபுறத்திலுள்ள X-ஐத் தொடவும்.

நேரடி அலைபரப்புக்கு பார்வையாளர்களை அழைக்க:

  1. உங்கள் காலவரிசையிலிருந்து இடதுபுறம் ஸ்வைப் செய்து அல்லது கீச்சு தொகுப்பானிலிருந்து  -ஐத் தொட்டு, கேமராவைத் திறக்கவும்.

  2. அடிப்புறத்தில் நேரலைப் பயன்முறையைத் தொடவும்.

  3. நேரலைப் பார்வையாளர்கள் உங்கள் அலைபரப்பில் இணைவதற்குக் கோர அனுமதிக்க, மேல் வலதுபுறத்திலுள்ள  Faces button Created with Sketch. ஐகானைத் தொடவும்.

  4. உங்கள் அலைபரப்பைத் தொடங்க, நேரலைக்குச் செல்க என்பதைத் தொடவும்.

  5.   Faces button Created with Sketch. ஐகானைத் தொடவும்.

  6. விருந்தினர்களை அழை என்பதைத் தொடவும்.

நேரடி அலைபரப்புக்கு பார்வையாளர்களை அழைக்க:

  1. உங்கள் காலவரிசையிலிருந்து இடதுபுறம் ஸ்வைப் செய்து அல்லது கீச்சு தொகுப்பானிலிருந்து   ஐகானைத் தொட்டு, கேமராவைத் திறக்கவும்.
  2. அடிப்புறத்தில் நேரலைப் பயன்முறையைத் தொடவும்.
  3. நேரலைப் பார்வையாளர்கள் உங்கள் அலைபரப்பில் இணைவதற்குக் கோர அனுமதிக்க, மேல் வலதுபுறத்திலுள்ள  Faces button Created with Sketch. ஐகானைத் தொடவும்.
  4. உங்கள் அலைபரப்பைத் தொடங்க, நேரலைக்குச் செல்க என்பதைத் தொடவும்.
  5.   Faces button Created with Sketch. ஐகானைத் தொடவும்.
  6. நீங்கள் விருந்தினர்களாகச் சேர்க்க விரும்பும் பார்வையாளர்களுக்கு அடுத்துள்ள “+” ஐத் தொடவும். 

நேரடி அலைபரப்பில் விருந்தினர்களைச் சேர்க்க:

  1. விருந்தினர்களை இயக்கியுள்ள ஒரு நேரலை அலைபரப்பைப் பார்த்துக் கொண்டிருக்கையில்,  Faces button Created with Sketch.  ஐகானைத் தொட்டு, பிறகு இணைய, கேள் என்பதைத் தொடவும்.

  2. ஒரு விருந்தினராக இணைவதற்கான உங்கள் கோரிக்கையை வலைபரப்பி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

  3. ஏற்றுக்கொண்டதும், நீங்கள் வலைபரப்பில் சேர்க்கப்பட முன்னர், திரையில் 5 வினாடிக்கு கவுண்டவுன் தோன்றும். நீங்கள் இணைவதில்லை என்று முடிவெடுத்தால், ரத்துசெய் என்பதைத் தொடவும்.

  4. அலைபரப்பின் அனைத்துப் பார்வையாளர்களும் உங்கள் ஆடியோவைக் கேட்பார்கள்.

ஒரு விருந்தினராக அலைபரப்பில் இருந்து வெளியேறுவதற்கு:

ஒரு விருந்தினராக நேரலை அலைபரப்பில் இருந்து வெளியேறுவதற்கு, அடிப்புறத்திலுள்ள  Group 2 Created with Sketch.  படவுருவைத் தொட்டு, துண்டி, என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது திரையின் மேல் இடதுபுறத்தில் உள்ள X -ஐத் தொட்டால் போதும். ஒரு விருந்தினராக நீங்கள் அலைபரப்பிலிருந்து வெளியேறும்போது, ஒரு பார்வையாளராக தொடர்ந்து நேரலை அலைபரப்பைப் பார்க்கலாம்.

நேரலை அலைபரப்பு அல்லது ரீப்ளேவை நான் பகிர முடியுமா?

முடியும்! நேரலை வீடியோ அல்லது முழுத் திரையில் ரீப்ளே என்ற பயன்முறையில் இருந்து, பகிர் ஐகானை  கிளிக் செய்யவும் அல்லது தொடவும், பிறகு பின்வரும் விருப்பங்களிடையே தேர்வு செய்யவும்:

  • ஒரு முழு நேரலை வீடியோ அல்லது ரீப்ளேவைத் தொடக்கத்திலிருந்து ட்விட் செய்ய, நேரடிச்செய்தி அனுப்ப அல்லது அதன் இணைப்பை நகலெடுக்க நேரலையில் பகிர் (நேரலையில்இருக்கும்போது) அல்லது தொடக்கத்திலிருந்து பகிர் (ரீப்ளே பயன்முறையில் இருக்கும்போது)-ஐக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.
  • ஒரு முழு நேரலை வீடியோ அல்லது தேர்ந்தெடுப்புப் பட்டியைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கும் ரீப்ளேவை ட்விட் செய்ய, நேரடிச்செய்தி அனுப்ப அல்லது அதன் இணைப்பை நகலெடுக்க இதிலிருந்து பகிர்… என்பதை கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.

 

“நிர்வாகியால் செயல்மறைக்கப்பட்டது” என்பதன் பொருள் என்ன?

நிர்வாகிகளை நியமிக்குமாறு Periscope வலைபரப்பிகள் தேர்வு செய்யலாம், வலைபரப்பிகள் சார்பாக அவர்களது அலைப்பரப்பில் இடப்படும் கருத்துகளைக் கவனிப்பதற்கும் நபர்களைச் செயல்மறைப்பதற்கும் அந்த நிர்வாகிகள் உதவலாம். அவர்களது தேர்ந்தெடுத்த நிர்வாகிகளில் ஒருவர், பார்வையாளரில் உள்ள ஒருவரைச் செயல்மறைக்கும்போது, அலைபரப்பின் மீதமுள்ள நேரத்தில் கருத்து வழங்குபவரால் அரட்டை செய்ய முடியாது. நிர்வாகிகளில் ஒருவர் யாரையேனும் எப்போது செயல்மறைத்தார் என்பதை Periscope அல்லது Twitter-இல் அலைபரப்பில் இணையும் எவரும் பார்க்க முடியும். 

Periscope-இலிருந்து அரட்டை நிர்வாகிகளை எவ்வாறு நியமிப்பது என்பது பற்றி மேலும் அறிக.

நான் Twitter-இல் நேரலைக்குச் செல்லும்போது, அது எங்கே செல்லும்?

ஒரு கீச்சு எங்கெல்லாம் செல்ல முடியுமோ அங்கெல்லாம் உங்கள் நேரலை வீடியோவால் செல்ல முடியும். அதாவது, இதை Twitter பயன்பாடு, Twitter இணையதளத்தில் தேட முடியும், மேலும் வேறு ஏதேனும் கீச்சு போலவே பிற இணையதளங்களில் இது உட்பொதிக்கப்பட முடியும். இது Periscope-இலும் கூட இருக்கும், அதில் அதைத் தேடவும் முடியும், இது Twitter -இல் நேரலை வீடியோக்களை அளிக்கும். உங்கள் நேரலை வீடியோ கீச்சில் ஓர் இருப்பிடத்தைச் சேர்த்தால், Periscope-இல் உள்ள உலக வரைபடத்தில் உங்கள் வீடியோவைக் கண்டுபிடிக்க முடியும்.

எனது நேரலை வீடியோ அலைபரப்பப்பட்ட பிறகு அதில் நான் மாற்றங்களைச் செய்ய முடியுமா?

iOS மற்றும் Android பயன்பாடுகளுக்கான Twitter-இல், அலைபரப்பு முடிந்த பிறகு, தலைப்பு, சிறுபடவுருவை மாற்றலாம் மற்றும் தனிப்பயன் தொடக்கப் புள்ளியை அமைக்கலாம். தொடங்குவதற்கு, நீங்கள் திருத்த விரும்பும் அலைபரப்பில் தொடவும். மீறிப்பாய் மெனுவைத் தொட்டு, பிறகு அலைபரப்பைத் திருத்து என்ற விருப்பத்தைத் தொடவும். உங்கள் மாற்றங்களைச் செய்ததும், சேமிக்குமாறு உங்களிடம் கூறப்படும்.

மூன்று முறை மட்டுமே அலைபரப்புத் தலைப்புகளைத் திருத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். கூடுதலாக, திருத்தங்கள் Twitter-இல் தோன்றுவதற்கு 15 நிமிடங்கள் வரையும் Periscope-இல் தோன்றுவதற்கு ஒரு நிமிடம் வரையும் ஆகும்.

இப்போது என்னிடம் ஒரு Periscope கணக்கு இருப்பதாக இது குறிப்பிடுகிறதா?

Periscope கணக்கில் உள்நுழைவதற்கு உங்கள் Twitter கணக்கைப் பயன்படுத்துகிறோம். Periscope-இன் அம்சங்களின் முழுப் பலனையும் பெற, பிரபல மற்றும் பிரத்யேக நேரலை வீடியோக்களைக் கண்டறிவதற்கும், பின்தொடர்வதற்கான கணக்குகளைக் கண்டுபிடிப்பதற்கும் Periscope பயன்பாட்டைப் பதிவிறக்கவும். நீங்கள் Periscope-இல் உங்கள் கணக்கு அமைப்புகளையும் புதுப்பிக்கலாம்.

எனது நேரலை வீடியோவைச் சேமிக்க முடியுமா?

நீங்கள் நேரலைக்குச் செல்லும்போது, ஒரு கீச்சாக உங்கள் நேரலை வீடியோக்கள் தானாகப் பதிவிடப்படும். கேமரா ரோலில் சேமி என்பதைத் தொடுவதன் மூலம் உங்கள் நேரலை வீடியோவின் முடிவில் உங்கள் சாதனத்தின் கேமரா ரோலில் நேராகவும் உங்கள் நேரலை வீடியோவைச் சேமிக்க முடியும். உங்கள் நேரலை வீடியோவைப் பிறகு பதிவேற்றிப் பகிர விரும்பினால், Twitter-இல் வீடியோக்களை எவ்வாறு பகிர்வது மற்றும் பார்ப்பது என்பதைப் படிக்கவும்.

நான் பின்தொடரும் கணக்குகள் ஒரு நேரலை வீடியோவைத் தொடங்கும்போது நான் அறிவிப்புகளைப் பெற முடியுமா?

முடியும்! எங்கள் Twitter-இல் வீடியோக்களைப் பகிர்தல் மற்றும் பார்த்தல் என்ற கட்டுரையைப் படித்து, கணக்குகள் நேரலைக்குச் செல்லும்போது அவற்றிலிருந்து புஷ் அறிவிப்புகளைப் பெறுவதற்கு எவ்வாறு தேர்வு செய்வது என்பதை அறிக.

Twitter-இல் நேரலை வீடியோவில் நான் கருத்துத் தெரிவிக்க முடியுமா?

முடியும், iOS, Android மற்றும் இணையத்தில் நீங்கள் பார்க்கின்ற ஏதேனும் நேரலை வீடியோவிலும் கருத்துத் தெரிவிக்கலாம் மற்றும் இதயங்களை அனுப்பலாம். கணக்குச் சுயவிவரத்தைப் பார்க்க, கருத்துக்குப் பதிலளிக்க அல்லது கணக்கைத் தடைசெய்ய, ஒரு கருத்தின் மீது தொடுவதன் மூலம் பார்வையாளரின் பிற உறுப்பினர்களுடன் நீங்கள் ஊடாடவும் முடியும். Twitter-இலிருந்து நீங்கள் ஒரு கணக்கைத் தடைசெய்தால், அவர் Periscope-இலும் தடைசெய்யப்படுவார் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

இதயங்கள் என்பவை எவை?

வீடியோவிற்கு எப்படி ஆதரவைப் பகிர்கிறீர்கள் எப்படி உங்கள் ஆர்வத்தைக் காட்டுகிறீர்கள் என்பதை இதயங்கள் குறிக்கின்றன. iOS அல்லது Android இல், அலைபரப்பிற்கு இதயத்தை வழங்க திரையைத் தொடவும். இணையத்தில் கீழ் வலது முலையில் உள்ள இதய ஐகானைக் கிளிக் செய்து உள்நுழைவதன் மூலம் இதயங்களை வழங்கலாம். இதயங்கள் மற்றும் சூப்பர் இதயங்கள் பற்றிய கூடுதல் தகவல் எங்களிடம் உள்ளன. 

நேரலை வீடியோவைப் பார்ப்பதில் இருந்தும் அதில் கருத்துத் தெரிவிப்பதில் இருந்தும் ஒருவரை நீங்கள் அகற்ற முடியுமா?

நீங்கள் Twitter-இல் ஒருவரைத் தடைசெய்யும்போது, அவர் உங்கள் நேரலை வீடியோவைப் பார்க்கவோ அதில் கருத்துத் தெரிவிக்கவோ முடியாது. உங்கள் நேரலை வீடியோவில் கருத்துத் தெரிவிப்பதில் இருந்து ஒருவரை நிறுத்த விரும்பினால், அவரின் கருத்தில் தொட்டு, அவரது சுயவிவரத்தைத் தேர்ந்தெடுத்து, கியர் ஐகானைத் தொட்டு, பிறகு பயனரைத் தடைசெய் என்பதைத் தேர்வு செய்வதன் மூலம் அவரைத் தடைசெய்யலாம். அந்தக் கணக்கு உங்கள் நேரலை வீடியோக்களில் இனி பங்கேற்க முடியாது, அந்தக் கணக்கு Twitter மற்றும் Periscope-இல் தடைசெய்யப்படும். மேலும் அறிய, Periscope-இன் கருத்து நிர்வாகம் என்ற கட்டுரையைப் படிக்கவும்.

ஒரு பார்வையாளராக, கருத்து என்பதைத் தேர்ந்தெடுத்து கருத்தைப் புகாரளி என்பதைத் தேர்வு செய்வதன் மூலம், முறைகேடு அல்லது வசைமொழி என நீங்கள் கண்டறியும் கருத்துகளைப் புகாரளிக்க முடியும். நீங்கள் ஒரு கருத்தைப் புகாரளிக்கும்போது, நேரலை வீடியோவின் மீதமுள்ள நேரத்திற்கு அந்தக் கருத்துத் தெரிவிப்பவரிடமிருந்து இனி செய்திகளைப் பார்க்க மாட்டீர்கள். எனினும் இது, Twitter அல்லது Periscope-இல் கணக்கைத் தடைசெய்யாது.

நேரலை வீடியோவை Twitter-இலிருந்து Periscope-இல் திறக்க முடியுமா?

முடியும்! Twitter-இல் ஒரு நேரலை முழுத் திரை வீடியோவிலிருந்து: விருப்பங்களின் மெனுவைத் திறக்க, iOS-இல் வலதுபுறம் ஸ்வைப் செய்யவும் அல்லது Android-இல் மேல்நோக்கி ஸ்வைப் செய்யவும். மெனுவிலிருந்து, Periscope -இல் திற என்பதைத் தொடவும்.

எனது நேரலை வீடியோவை நீக்க முடியுமா?

முடியும், நீங்கள் பதிவிட்ட வீடியோக்களில் எதையும் எந்த நேரத்திலும் நீக்க முடியும். 

குறிப்பு: உங்கள் நேரலை வீடியோவைக் கொண்ட கீச்சை நீக்குவது, அந்த வீடியோவை Periscope-இல் இருந்தும் நீக்கும், அதேவேளை Periscope-இலிருந்து உங்கள் வீடியோவை நீக்குவது அந்தக் கீச்சை Twitter-இலிருந்து தானாக நீக்காது.

நேரலைக்குச் செல்வதிலிருந்து நான் தேர்வு நீக்க முடியுமா?

முடியும், செய்யலாம். தேர்வு நீக்குவதற்கு: உங்கள் அமைப்புகள் மற்றும் தனியுரிமை என்பதற்குச் சென்று, தனியுரிமை மற்றும் பாதுகாப்பு என்பதைத் தொட்டு, பிறகு அம்சத்தை முடக்க, Periscope உடன் இணை என்பதைத் தேர்வு நீக்கவும்.

நீங்கள் தேர்வு நீக்கும்போது, நீங்கள் Twitter-இல் இனி நேரலைக்குச் செல்ல முடியாது அல்லது அவர்களது நேரலை வீடியோக்களில் கருத்தையும் இதயத்தையும் சேர்க்க முடியாது, ஆனால் உங்கள் முந்தைய நேரலை வீடியோக்கள் இன்னமும் Twitter மற்றும் Periscope ஆகியவற்றில் கிடைக்கும். உங்கள் நேரலை வீடியோவைக் கொண்ட கீச்சை நீக்குவதன் மூலம், Twitter மற்றும் Periscope ஆகியவற்றிலிருந்து முந்தைய நேரலை வீடியோக்களை நீக்குமாறு எப்போதும் தேர்வு செய்யலாம்.

எனது கீச்சுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன என்றால் நான் நேரலைக்குச் செல்ல முடியுமா?

நீங்கள் கீச்சுகளைப் பாதுகாத்திருந்தால், நீங்கள் Twitter-இலிருந்து நேரலைக்குச் செல்ல முடியாது. எனினும், நீங்கள் Periscope -ஐப் பதிவிறக்க முடியும் மற்றும் Periscope மூலம் தனிப்பட்ட நேரலை வீடியோவை வழங்க முடியும்.

உங்கள் கீச்சுகளைப் பாதுகாக்கப்பட்டுள்ளவை ஆக்கும்போது, பொதுவில் கிடைக்கச் செய்த பிறகு, உங்கள் நேரலை வீடியோக்கள் Twitter-இல் நீங்கள் பின்தொடர்பவர்களால் மட்டுமே கண்டறியப்படும், ஆனால் அவை Periscope-இல் தொடர்ந்து கிடைக்கும். உங்கள் நேரலை வீடியோவைக் கொண்ட கீச்சை நீக்குவதன் மூலம், Twitter மற்றும் Periscope ஆகியவற்றிலிருந்து முந்தைய நேரலை வீடியோக்களை நீக்கலாம்.

எனது நேரலை வீடியோவில் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்க முடியுமா?

Twitter மற்றும் Periscope வழியாக நேரலை வீடியோக்களில் பார்வையாளர்கள் நேரடியாகக் கருத்துத் தெரிவிக்கலாம். மேலும் அறிய, Periscope உதவி மையம் செல்லவும்.

பார்ப்பதற்கான கூடுதல் நேரலை வீடியோக்களை எவ்வாறு கண்டறிவது?

உலகம் முழுவதிலிருந்தும் நேரலை வீடியோக்களை உலாவ, Periscope -ஐப் பதிவிறக்கவும்.

நேரலை வீடியோவில் என்ன வகையான உள்ளடக்கம் அனுமதிக்கப்படும்?

Bookmark or share this article