மே 29
Jump to navigation
Jump to search
<< | மே 2019 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXIX |
மே 29 (May 29) கிரிகோரியன் ஆண்டின் 149 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 150 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 216 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்[மூலத்தைத் தொகு]
- 363 – உரோமைப் பேரரசர் யூலியன் சசானியப் படைகளை சசானியத் தலைநகரில் தோற்கடித்தார், ஆனாலும் தலைநகரைக் கைப்பற்ற முடியவில்லை.
- 1328 – நான்காம் பிலிப்பு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
- 1416 – கலிப்பொலி போர்: வெனிசியக் குடியரசு உதுமானிய கடற்படையை கலிப்பொலியில் தோற்கடித்தது.
- 1453 – கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி: உதுமானிய இராணுவம் சுல்தான் இரண்டாம் முகமது தலைமையில் கான்ஸ்டண்டினோபிலை 53-நாள் முற்றுகையின் பின்னர் கைப்பற்றியது. பைசாந்தியப் பேரரசு முடிவுக்கு வந்தது.
- 1660 – இரண்டாம் சார்லசு பெரிய பிரித்தானியாவின் மன்னனாக மீண்டும் முடி சூடினான்.
- 1677 – வேர்ஜீனியாவில் குடியேறிகளுக்கும் உள்ளூர் பழங்குடிகளுக்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது.
- 1780 – அமெரிக்கப் புரட்சிப் போர்: சரணடைந்த அமெரிக்கப் போர்வீரர்கள் 113 பேரை "பனஸ்ட்ரே டார்லெட்டன்" தலைமையிலான படைகள் கொன்றனர்.
- 1790 – ரோட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 1798 – 300 முதல் 500 வரையான ஐக்கிய அயர்லாந்து கிளர்ச்சிவாதிகள் பிரித்தானிய இராணுவத்தினரால் அயர்லாந்தில் கொல்லப்பட்டனர்.
- 1848 – விஸ்கொன்சின் ஐக்கிய அமெரிக்காவின் 30வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- 1864 – மெக்சிக்கோ பேரரசர் முதலாம் மாக்சிமிலியன் முதற்தடவையாக மெக்சிக்கோ வந்து சேர்ந்தார்.
- 1867 – ஆத்திரிய-அங்கேரிப் பேரரசு அமைக்கப்பட்டது.
- 1868 – செர்பியாவின் இளவரசர் மிகைலோ ஒப்ரெனோவிச் படுகொலை செய்யப்பட்டார்.
- 1869 – பிரித்தானியாவில் பகிரங்க மரணதண்டனை தடை செய்யப்பட்டது.
- 1886 – மருந்தியலாளர் ஜான் பெம்பர்ட்டன் முதற் தடவையாக கொக்கக் கோலாவுக்கான விளம்பரத்தை அட்லாண்டா ஜேர்னல் இதழில் வெளியிட்டார்.
- 1903 – செர்பியா மன்னர் முதலாம் அலெக்சாந்தர், அராசி திராகா இருவரும் பெல்கிறேட் நகரில் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1914 – புனித லாரன்சு வளைகுடாவில் எம்ப்ரெஸ் ஒஃப் அயர்லாந்து என்ற அயர்லாந்து ஆடம்பரக் கப்பல் மூழ்கியதில் 1,012 பேர் உயிரிழந்தனர்.
- 1919 – ஐன்சுடைனின் பொதுச் சார்புக் கோட்பாடு ஆர்த்தர் எடிங்டன் என்பவரால் சோதிக்கப்பட்டது. பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.
- 1931 – பெனிட்டோ முசோலினியைக் கொலை செய்ய முயன்றதாக அமெரிக்கரான மிச்செல் சிரு என்பவரை இத்தாலிய இராணுவம் சுட்டுக் கொன்று மரணதண்டனைக்குட்படுத்தியது.
- 1950 – வட அமெரிக்காவைச் சுற்றி வந்த முதலாவது கப்பல் புனித ராக் கனடா, ஹாலிஃபாக்ஸ் நகரை வந்தடைந்தது.
- 1953 – எட்மண்ட் இல்லரி, செர்ப்பா டென்சிங் இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் ஏறி சாதனை படைத்தனர்.
- 1964 – அரபு நாடுகள் கூட்டமைப்பு பாலத்தீனப் பிரச்சினை குறித்து விவாதிக்க கிழக்கு எருசலேமில் கூடியது. இது பலத்தீன விடுதலை இயக்கத்தை அமைக்க இது வழி கோலியது.
- 1972 – டெல் அவிவ் விமான நிலையத்தில் மூன்று சப்பானியர்கள் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
- 1982 – இலங்கை மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
- 1982 – போக்லாந்து போர்: பிரித்தானியப் படைகள் அர்கெந்தீனாவை கூஸ் கிறீன் சண்டையில் தோற்கடித்தது.
- 1985 – பெல்ஜியத்தில் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற கைகலப்பில் அரங்கின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் 39 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
- 1988 – அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் சோவியத் தலைவர் கொர்பச்சோவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு மாஸ்கோ வந்து சேர்ந்தார்.
- 1990 – போரிஸ் யெல்ட்சின் சோவியத் உருசியாவின் அரசுத்தலைவராக நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார்.
- 1999 – டிஸ்கவரி விண்ணோடம் பன்னாட்டு விண்வெளி நிலையத்துடனான தனது முதலாவது இணைப்பை வெற்றிகரமாக முடித்தது.
- 1999 – 16 ஆண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் நைஜீரியாவில் அரசுத்தலைவரை மக்கள் தெரிவு செய்தனர்.
- 2005 – ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்துத் தடை செய்தது.
- 2008 – ஐசுலாந்தில் 6.1 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 30 பேர் காயமடைந்தனர்.
- 2012 – இத்தாலியின் வடக்கே 5.8-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 24 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்[மூலத்தைத் தொகு]
- 1630 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு (இ. 1685)
- 1872 – சிவயோக சுவாமி, ஈழத்துச் சித்தர் (இ. 1964)
- 1874 – கில்பர்ட் கெயித் செஸ்டர்டன், ஆங்கிலேயக் கவிஞர், கட்டுரையாளர் (இ. 1936)
- 1880 – ஆசுவால்டு ஸ்பெங்கிலர், செருமானிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1936)
- 1890 – மார்ட்டின் விக்கிரமசிங்க, சிங்கள எழுத்தாளர் (இ. 1976)
- 1914 – டென்சிங் நோர்கே, நேப்பால்-இந்திய மலையேறி (இ. 1986)
- 1917 – ஜான் எஃப். கென்னடி, அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவர் (இ. 1963)
- 1923 – தருமபுரம் ப. சுவாமிநாதன், தமிழிசைத் தேவாரப் பேரறிஞர் (இ. 2009)
- 1926 – அப்துலாயே வாடே, செனிகலின் 3வது அரசுத்தலைவர்
- 1929 – பீட்டர் ஹிக்ஸ், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-இசுக்கொட்டிய இயற்பியலாளர்
- 1937 – மானா மக்கீன், ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர்
- 1942 – மாதுலுவாவே சோபித்த தேரர், இலங்கைப் பௌத்த பிக்கு, மனித உரிமை செயற்பாட்டளர் (இ. 2015)
- 1957 – மோசன் மக்மால்பஃப், ஈரானியத் திரைப்பட இயக்குநர்
- 1964 – ஆறுமுகன் தொண்டமான், இலங்கை மலையக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர்
இறப்புகள்[மூலத்தைத் தொகு]
- 1500 – பார்த்தலோமியோ டயஸ், போர்த்துக்கீச நாடுகாண் பயணி, மாலுமி (பி. 1451)
- 1829 – ஹம்பிரி டேவி, ஆங்கிலேய-சுவிட்சர்லாந்து வேதியியலாளர் (பி. 1778)
- 1892 – பகாவுல்லா, பகாய் சமயத்தைத் தோற்றுவித்த பாரசீகர் (பி. 1817)
- 1911 – டபிள்யூ. எஸ். கில்பர்ட், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1836)
- 1958 – வான் ரமோன் ஹிமெனெஸ், நோபல் பரிசு பெற்ற எசுப்பானியக் கவிஞர் (பி. 1881)
- 1979 – மெரி பிக்ஃபோர்ட், கனடிய-அமெரிக்க நடிகை, தயாரிப்பாளர் (பி. 1892)
- 1984 – மார்க்கண்டு சுவாமிகள், ஈழத்து சித்தர் (பி. 1899)
- 1987 – சரண் சிங், இந்தியாவின் 5வது பிரதமர் (பி. 1902)
- 2005 – ஹாமில்டன் நாகி, தென்னாப்பிரிக்க மருத்துவர் (பி. 1926)
- 2008 – டி. பி. முத்துலட்சுமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- 2009 – சோ. கிருஷ்ணராஜா, இலங்கை வரலாற்றாளர், மெய்யியல் பேராசிரியர் (பி. 1947)
- 2013 – ஜயலத் ஜயவர்தன, இலங்கை அரசியல்வாதி, மருத்துவர் (பி. 1953)
- 2018 – முக்தா சீனிவாசன், தமிழ்த் திரைப்பட இயக்குநர், (பி. 1929)
சிறப்பு நாள்[மூலத்தைத் தொகு]
- சனநாயக நாள் (நைஜீரியா)
- ஐக்கிய நாடுகளின் அமைதி காப்போருக்கான சர்வதேச நாள்